புலம்பெயர்ந்தோர் தடுப்பு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 38 பேர் இறந்ததற்குக் காரணமான எட்டு சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளதாக மெக்ஸிகோ வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று (திங்கட்கிழமை) ஏற்பட்ட தீவிபத்து ஒரு கொலை சம்பவமாக இருக்கலாம் என்ற கோணத்தில் இப்போது விசாரிக்கப்படுகிறது.
சந்தேகத்திற்குரியவர்களில் ஐந்து பேர் அமெரிக்க எல்லையில் உள்ள சியுடாட் ஜுவாரெஸ் நகரில் உள்ள பாதுகாப்புக் காவலர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் தென் அமெரிக்காவிலிருந்து வந்த பாதிக்கப்பட்டவர்கள் ஏன் விடுவிக்கப்படவில்லை என்பதை விளக்க அதிகாரிகள் பெருகிய அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர்.
இதற்குக் காரணமானவர்கள் சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள் என்று மெக்ஸிகோ ஜனாதிபதி ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் கூறினார்.
எவ்வாறாயினும், புலம்பெயர்ந்தோர் சுற்றிவளைப்பின் போது தற்செயலாக தடுத்து வைக்கப்பட்டனர், மோசமான நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் மற்றும் தடுப்புக்காவலில் இருந்தபோது அவர்களுக்கு போதுமான தண்ணீர் வழங்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.