பாகிஸ்தானை போல் அல்லாமல், இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வொஷிங்டனில், கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நிர்மலா சீதாராமனிடம், இந்தியாவில் இஸ்லாமியர்கள் தாக்கப்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளியாவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
மேற்கத்திய ஊடகங்கள் கள ஆய்வு செய்யாமல் செய்தி வெளியிடுவதாக குற்றம்சாட்டிய நிர்மலா சீதாரமன், இந்தியாவில், எவ்வித இடையூறுமின்றி இஸ்லாமியர்கள் இயல்பு வாழ்க்கை நடத்திவருவதாகவும், ஸ்காலர்ஷிப் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அவர்களுக்கு வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
பாகிஸ்தானில், மத சிறுபான்மையினர் படுகொலை செய்யப்பட்டுவரும் நிலையில், இந்தியாவில், இஸ்லாமியர்களின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்துவருவதாக நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டினார்.
இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை நிகழ்த்தப்பட்டால் அது எப்படி சாத்தியமாகும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.