உருமாறிய கொரோனா XBB1.16 வைரசால், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்க முடியும் என சுகாதாரத் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த மாறுபாட்டால், வைரஸின் முந்தைய வேரியண்டைக் காட்டிலும் மிகவும் தொற்றும் தன்மையுடையது மற்றும் அதிக வீரியம் மிக்கதாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனால், கொரோனாவை விட அடினோவைரஸ் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா போன்ற தொற்றுகள் மிகவும் தொந்தரவாக இருக்கும் என கூறப்படுகிறது.
அடுத்த நான்கு வாரங்கள் முக்கியமானதாக இருக்கும் என குழந்தைகள் மருத்துவ நிபுணர் டிரென் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களில் இந்தியாவில் கொரேனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரித்துள்ளதற்கு XBB 1.16 எனப்படும் புதிய வைரஸ் வேரியண்டே காரணம் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.