நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் இளைஞர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகருமான ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியான நிலைமையை சீர் செய்வதற்கான வேலைத்திட்டங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் நாட்டை கட்டியெழுப்புவதற்கு நிலையான ஆட்சி முறைமை தேவை என்பதை பொது மக்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.