சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை சட்டமூலமாக்குவதற்கு இந்த அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மக்களாணை இல்லாத அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படும் எந்தவொரு சட்டமும் மக்களை கட்டுப்படுத்தாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆகவேதான் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என கடந்த வருடத்தில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி வருவதாகவும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
எனவே நாடாளுமன்ற தேர்தலை நடாத்தி மக்களாணை பெற்றுக்கொண்டு இச்சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.