பண்னை நாக பூசணிக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்தவர் எவ்வளவு காலம் யாழ்ப்பாணத்தில் இருப்பாரோ தெரியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “பண்ணையில் அமைந்துள்ள நாகபூசணி அம்மன், உரிய அனுமதிகள் பெறாது அமைக்கப்பட்டதாக தெரிவித்து ஒருவர் முறைப்பாடு வழங்கியதாக அறிகிறேன்.
அவரது முறைப்பாட்டை பொலிசார் ஏற்றது பிரச்சினை இல்லை. யாழ் மாவட்டத்தில் உரிய முறையில் அனுமதி பெற்றா வழிபாட்டு இடங்கள் அமைக்கப்படுகின்றன என்பதை பொலிசாரிடம் கேட்க விரும்புகிறேன்.
சட்டம் யாவருக்கும் சமன், சட்டத்தை உரிய முறையில் பொலிசார் நடைமுறைப்படுத்த வேண்டும்.
முறைப்பாடு வழங்கியவர் யார் என்பது இதுவரை வெளி வராத நிலையில் இன்று நீதிமன்றத்தில் பெரும்பாலும் முறைப்பாட்டை வழங்கியவர் யாழ்ப்பாணத்தை விட்டு விரைவில் வெளியேறுவார் போல தெரிகிறது.“ எனத் தெரிவித்துள்ளார்.