காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகத்தினால் தற்போது மிரட்டல் விடுக்கப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
மூன்று தடவைகள் அறிவித்தும் அலுவலகத்திற்கு மதிப்பு கொடுக்கவில்லை என்றும் நான்காவது தடைவ அறிவித்து வரவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுப்போம் என மிரட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஓ.எம்.பி. அலுவலகத்தினால் வழங்கப்படும் நட்ட ஈடுட்டினை பெற்றுக்கொள்ளுமாறும் அதற்காக பிள்ளைகளையும் வங்கி கணக்கு இலக்கத்தையும் கொண்டுவரவும் அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
ஒ.எம்.பி அலுவலகத்தினால் அதிக இலாபம் இருப்பதனால்தான் தொடர்ச்சியாக இவ்வாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றது என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னரும் எதிர்வரும் 18 ஆம் திகதி இனம்படுகொலை செய்த நாட்கள் நெருங்கிவரும் நேரத்தில் இவ்வாறான மிரட்டல்கள் வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.