யாழ்ப்பாணம் நெடுந்தீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பெயரில் புங்குடுதீவு, 3ஆம் வட்டாரத்தை சேர்ந்த 50 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் கனேடிய குடியுரிமையுடையவர் எனவும் அதிகளவில் ஹெரோயின் பாவனை செய்பவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
நீண்டகால பகையை தீர்க்க இந்த கொலையை செய்ததாகவும் 40 பவுண் தங்கநகைகளையும் அவர் திருடிச் சென்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நகைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ள அதேநேரம் கொலை செய்யப்பட்டவர்கள் அனைவரும் சந்தேகநபரின் உறவினர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று அதிகாலை 4.30 மணியளவில் முதியவர்கள் தூக்கத்திலிருந்த போது, 5 முதியவர்களையும் கத்தியால் வெட்டி கொலை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வீட்டு நாய் குரைத்து சத்தமிட நாயையும் வெட்டியுள்ள போதும் நாய் காயத்துடன் தப்பித்துக் கொண்டது என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சமயத்தில், அந்த வீட்டில் வந்து தங்கியிருக்கும் மற்றொரு உறவினர் அங்கு வந்ததாகவும், அவரையும் வெட்டிக் கொன்றுவிட்டு, அங்கிருந்து வெளியேறி படகில் புங்குடுதீவு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்