உள்ளூர் கடனை மறுசீரமைக்க அரசாங்கம் தயாராக இருந்தாலும், அதற்கான சரியான வேலைத்திட்டம் இல்லை என பேராசிரியர் குற்றம் சாட்டியுள்ளார்.
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இதுவரை எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.
மேலும், உள்ளூர் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் முதலில் தேவைப்படுவது முறையான நடைமுறை ஆய்வை மேற்கொள்வதே எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.