ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் நாட்டை ஏல பூமியாக மாற்றியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் வினைத்திறனற்ற ஆட்சியினால் நாட்டின் வளங்களை உலக பணக்காரர்களுக்கு விற்பனை செய்யும் ஏலம் நடைபெற்று வருவதாகவும், இலாபம் ஈட்டும் நிறுவனங்களைக் கூட விற்பனை செய்யும் கொள்கையில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை இலாபகரமாக மாற்றுவதற்கும், இலாபம் ஈட்டும் நிறுவனங்களை அதிக இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றுவதற்கும் புதிய திட்டங்கள் தேவையென்றாலும், முறையான திட்டமிடல் இன்றி பொது வளங்களை விற்பனை செய்வதே அரசாங்கத்தின் கொள்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.