ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ள போதும் தன்னையும் குறி வைப்பதை ஏற்றுகொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தாலும், தாக்குதல்களின் குற்றவாளியாக என்னை காண்பது நியாயமற்றது.
2019 மே 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் இன்னமும் இடம்பெற்று வருகின்றது.
இருந்தபோதும் தாக்குதல்கள் தொடர்பாக என்னை சிறையில் அடைக்க அல்லது தூக்கிலிடவே கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை விரும்புகின்றார். உரிய விசாரணைகள் முடிவடையாமல் அவர் இதைச் செய்ய முயற்சிக்கிறார்” என்றார்.