ஐ.எம்.எப். உடன்படிக்கை மற்றும் கடன் மறுசீரமைப்பு விவாகரம் தொடர்பாக அடுத்த மூன்று நாட்களுக்கு அரசாங்கத்துடன் ஆரோக்கியமான பேச்சுவார்த்தையில் ஈடுபடத்தயார் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், எதிர்க்கட்சியில் இருந்தபோது வெளிப்படைத்தன்மை குறித்து பேசிய ரணில் விக்ரமசிங்க தற்போது, உடன்படிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பிக்காமை குறித்து கவலை வெளியிட்டார்.
அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தப் போவதில்லை என மொட்டுக் கட்சியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தினை சுட்டிக்காட்டிய சஜித் பிரேமதாச, டெலிகொம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளிட்டவற்றை எவ்வாறு இன்று விற்க முடியும் என்றும் கேள்வியெழுப்பினார்.
எதிர்க்கட்சி என்பதால், அனைத்து விடயங்களுக்கும் எதிர்ப்பினை வெளியிடப்போவதில்ல என குறிப்பிட்ட சஜித் பிரேமதாச, இலாபம் ஈட்டும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது ஏன் என்றும் கேள்வியெழுப்பினார்.
அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு அரசாங்கத்துடன் பேச்சு நடத்த நாம் தயாராகவே உள்ளதாகவும் எவ்வாறாயினும் ஐக்கிய மக்கள் சக்தி என்றும் ஆளும் தரப்புடன் இணைந்து செயற்படாது என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.