காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இருந்த ஐஎஸ் தலைவர் தலிபான்களால் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடந்த குண்டுவெடிப்பில் 170 பொதுமக்கள் மற்றும் 13 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் குழப்பமான முறையில் வெளியேறும் போது இந்த தாக்குதல் இடமபெற்றது.
மேற்கத்திய அதிகாரிகள் ஒரு பெரிய தாக்குதலை எச்சரித்த சில மணிநேரங்களுக்குப் பின்னர் இந்த தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்றது.
இந்த தாக்குதலில் பின்னனியில் இருந்த ஐஎஸ் தலைவர் பல வாரங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட போதும் அவரது மரணத்தை தற்போதே உறுதிப்படுத்த முடிந்தது என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு இவரு கொலை செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எல் தலைவர் யார் என்ற அடையாளத்தை அமெரிக்க அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.