பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் மூத்த பிரமுகர் காதர் அட்னான் 86 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பின்னர் இஸ்ரேல் சிறையில் மரணமடைந்துள்ளார்.
இன்று அதிகாலை சுயநினைவின்றி காணப்பட்ட அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் அவரை காப்பாற்ற முடியவில்லை என இஸ்ரேல் சிறைச்சாலை சேவை தெரிவித்துள்ளது.
மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றுக்கொள்ள காதர் அட்னான் மறுத்துவிட்டதாக இஸ்ரேல் சிறைச்சாலை சேவை தெரிவித்துள்ளது.
மரணம் அறிவிக்கப்பட்ட பின்னர், காசா பகுதியில் இருந்து போராளிகள் மூன்று ரொக்கெட்டு தாக்குதலை மேற்கொண்டதாகவும் இருப்பினும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர் சிறையில் இறந்தால், இஸ்ரேலுக்கு பெரிய விலை கொடுக்கப்படும் என முன்னதாக காசா பகுதியை தளமாகக் கொண்ட இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு எச்சரித்திருந்தது.
கடந்த இரண்டு தசாப்தங்களாக இஸ்ரேலிய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் ஐந்து முறை உண்ணாவிரத போராட்டத்தை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.