நாட்டிலுள்ள மக்கள் தொகையில் 25 வீதமானோர் விட்டமின் D குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் போஷாக்கு பிரிவின் வைத்திய நிபுணர் ரேணுகா ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களைக் கொண்டு நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் மூலம் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இது சற்று ஆபத்தான சூழ்நிலையாக உருவாகக்கூடும் எனவும் வைத்திய நிபுணர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
விட்டமின் D குறைபாட்டைக் குறைக்க முடிந்தவரை சூரிய ஒளியில் இருப்பது முக்கியமானது.
ஆனால், நாட்டில் தற்போது சூரிய ஒளியின் தாக்கம் அதிகளவில் காணப்படுகின்றது. எனவே, விட்டமின் D இனை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருக்கக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களின் விட்டமின் குறைபாடு குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
சில மாதங்களுக்கு ஒருமுறை விட்டமின் குறைபாடு குறித்து வைத்திய அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் வைத்திய நிபுணர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.