எதிர்வரும் காலங்களில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் விசேட திட்டத்தை அறிமுகப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
அதற்கமைவாக, அரச நிதி மற்றும் வெளிநாட்டு முதலீட்டுக்கான ஏற்பாடுகள் அடங்கிய சலுகை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு போதிய ஊக்குவிப்பு கிடைக்காமை பாரிய பிரச்சினையாக உள்ளது என அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார்.
நாட்டில் பல இயற்கை வளங்கள் காணப்படுகின்ற போதிலும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது உரிய முறையில் மேற்கொள்ளப்படுவது தொடர்பில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.