உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த அரச ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளித்த அரச ஊழியர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதியைத் தவிர அருகிலுள்ள உள்ளூராட்சித் தொகுதிகளில் வேலையில் ஈடுபட முடியும்.
உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும் வரையில் அரச ஊழியர்கள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அவதானிப்புக்களை மேற்கொண்டுள்ளது.
குறித்த அவதானிப்புகளை கருத்திற்கொண்டு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புரவினால் அமைச்சரவைக்கு இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு உரிய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க தேர்தல் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது என ஜானக வக்கும்புர குறிப்பிட்டுள்ளார்.