தேசிய கொள்முதல் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நியமித்துள்ளார்.
அரசியலமைப்புச் சபையின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த நியமனங்கள் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, இதற்கு முன்னர் இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய டபிள்யூ. சுதர்மா கருணாரத்ன இந்த ஆணைக்குழுவின் தலைவராக பணியாற்றவுள்ளார்.
இதேவேளை, வர்ணகுலசூரிய இவன் திசேர, டி.பியசிறி தரணகம, சுமந்திரன் சின்னகந்து மற்றும் ஏ.ஜி.புபுது அசங்க குணவர்தன ஆகியோர் இதன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.