பௌத்த விகாரைகள் கட்டுவதற்கு ஏதுவாக பணத்துக்காக காணிகளை விற்க வேண்டாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.
கந்தரோடையிலுள்ள இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், வெளிநாட்டில் உள்ள ஒருவரால் விற்கப்பட்ட காணிக்கு உள்ளேயே விகாரை அமைக்கப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.
இராணுவத்தினர் வெறும் காணிகளையும் அவற்றின் உரிமையாளர்களையும் அடையாளம் கண்டு, அவற்றை வாங்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதற்கு எதிராக 3,5,10 பேருடன் போராட்டங்களை நடத்தி அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுக்க முடியாது என்றும் ஆகவே அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
விகாரைகளை கட்டி, அதனை பராமரிக்க என ஆட்களை கொண்டு வந்து, சிங்கள பிரதேசத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றது என்றும் சித்தார்த்தன் சுட்டிக்காட்டினார்.