சுகாதார சுற்றுலா மூலம் இலங்கைக்கு வருமானத்தை ஈட்டும் வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்படும் என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு கொழும்பு அறக்கட்டளையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நமது நாட்டின் அழகிய சூழலுடன், சுகாதார சுற்றுலாவை வருமானம் ஈட்டக்கூடிய ஆதாரமாக நாம் உருவாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியாவில் வாழும் பல இலங்கையர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக மீண்டும் நாட்டுக்கு வருவது தொடர்பில் தான் அறிந்துள்ளதாகவும் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை இதை ஒரு வணிக வாய்ப்பாக மாற்றி, நாட்டின் சுகாதார அமைப்பின் இந்த அம்சத்தை மேலும் மேம்படுத்த வேண்டும் என்று சாகல ரத்நாயக்க கூறியுள்ளார்.