மதுபானம் மற்றும் பியர் ஆகியவற்றின் விலைகளை குறைப்பது தொடர்பான தங்களது அபிப்பிராயங்களை வழங்குமாறு கலால் திணைக்களம் உள்ளிட்ட தரப்பினருக்கு நிதியமைச்சு அறிவித்துள்ளது.
இதன் விலைகள் குறைவாக காணப்படுவதனால் கலால் வரி வருமானத்தில் சில பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனவும், எனவே அபிப்பிராயங்களை வழங்குமாறு கலால் திணைக்களம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் திறைசேரிக்கு நிதியமைச்சு அறிவித்துள்ளது.
உற்பத்தி வரியை குறைக்க வாய்ப்பு இருந்தால், மதுபானம் மற்றும் பியர் ஆகியவற்றின் விலையை குறைக்க வாய்ப்பு உள்ளதாக தயாரிப்பாளர்கள் சுட்டிக் காட்டுவதுடன், அடுத்த இரண்டு மாதங்கள் அவற்றின் விலையை குறைக்க வாய்ப்பு உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும், மக்கள் சட்டவிரோத மதுபான பாவனையால் மதுபானத்தின் விலை அதிகரிப்பு காரணமாக பல சுகாதார பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது என்றும் இதன் காரணமாக மருந்துகளின் விலையும் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.