களுத்துறையில் 16 வயதுடைய பாடசாலை மாணவியை பிரதான சந்தேகநபருக்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரிடம் 16 வயதுடைய பாடசாலை மாணவியை 20,000க்கு விற்பனை செய்யுமாறு தனது தோழியுடன் விடுதியில் இருந்த இளைஞன் (22) யோசனை கூறியதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பொலிஸாரின் சந்தேகத்தின்படி, பிரதான சந்தேக நபரிடம் குறித்த மாணவியை விற்பனை செய்தமைக்காக 22 வயதுடைய இளைஞன், இந்தத் தொகையில் ஒரு பகுதியைப் பெற்றுள்ளார்.
மே 06 அன்று, களுத்துறையில் உள்ள ரயில் தண்டவாளத்திற்கு அருகில் 16 வயது சிறுமியின் நிர்வாண சடலம் கண்டெடுக்கப்பட்டது, அவள் ஐந்து மாடி ஹோட்டலின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து களுத்துறை இசுரு உயன பிரதேசத்தில் வசிக்கும் தனுஷ்க கயான் சஹபந்து என்ற 29 வயதுடைய இளைஞர் 09ஆம் திகதி கைது செய்யப்பட்டார். எவ்வாறாயினும், முதற்கட்ட விசாரணைகளின் போது, சந்தேக நபர் அனைத்து கொலைக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.
மூன்றாவது மாடியில் இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு 06 ஆம் திகதி மற்றுமொரு இளம் ஜோடி (19 வயதுடைய இளம் பெண் மற்றும் 22 வயதுடைய ஆண்) மற்றும் 16 வயது சிறுமியுடன் ஹோட்டலுக்குச் சென்றதாக அவர் தெரிவித்தார். அவர்களுடன் சேர்ந்து மது அருந்தியதையும் ஒப்புக்கொண்டார்.
அந்த நாளில் பாடசாலை மாணவியை முதல் தடவையாக சந்திப்பதற்கு முன்னர் தனக்கு அறிமுகம் இல்லை என்றும் 22 வயதுடைய இளைஞனால் தான் தனக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கைது செய்யப்பட்ட உடனேயே, களுத்துறை நீதவான் நீதிமன்றம், 10 அன்று, மேலதிக விசாரணைகளுக்காக அவரை 48 மணிநேரம் காவலில் வைக்க பொலிஸாருக்கு அனுமதி வழங்கியது.
தடுப்புக் காலத்தையடுத்து, களுத்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டபட்டது.
நேற்றைய நீதிமன்ற நடவடிக்கைகளின் போது, சிறுமியின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என பிரதிவாதி சட்டத்தரணி நீதவானிடம் தெரிவித்தார்.
பொலிஸாரிடம் வழங்கிய முதற்கட்ட வாக்குமூலத்தில், ஒருவருடன் ஒருவர் நெருக்கமாக இருந்த போதிலும் தாங்கள் உடலுறவு கொள்ளவில்லை என சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவரது கூற்றுப்படி, அந்த இளம்பெணுக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் அவர் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி கத்தினார் என்றும் அழைப்பு முடிந்ததும், அவள் ஜன்னல் அருகே இருந்த நாற்காலியில் ஏறி, கட்டிடத்திலிருந்து குதித்துவிட்டாள் என்றும் கூறியுள்ளார்.
இளைஞருக்கு இந்த தொலைபேசி அழைப்பை யார் செய்தார்கள் என்பதை பொலிஸார் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று பாதுகாப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, உயிரிழந்தவரின் உடலில் காணப்படும் கடித்த தடயங்கள் பிரதான சந்தேக நபருடையதா என்பதைக் கண்டறிய 29 வயதுடைய நபரை சட்ட வைத்திய நிபுணரிடம் ஒப்படைக்குமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோரிக்கைக்கு அனுமதி வழங்கிய நீதவான், சந்தேக நபரை 16 ஆம் திகதி சட்ட வைத்திய நிபுணர் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறும், அவரை 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.
குறித்த இளம் தம்பதியினர் மற்றும் குழு ஹோட்டலுக்கு வந்த காரின் சாரதியும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள், 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், ஹோட்டல் உரிமையாளரின் மனைவி வியாழக்கிழமை (மே 11) இறந்தவரின் தேசிய அடையாள அட்டையை சரியாக பதிவிட தவறியமைக்காக கைது செய்யப்பட்டார்.
ஹோட்டலில் அறையை வாடகைக்கு எடுப்பதற்காக 16 வயது சிறுமி தயாரித்த என்ஐசி அவரது நண்பர் ஒருவருக்குச் சொந்தமானது என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வியாழக்கிழமை, பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையில், காவலில் வைக்கப்பட்டிருந்த 22 வயது இளைஞரால் களு ஆற்றில் வீசப்பட்டதாகக் கூறப்படும் பதின்ம வயதுப் பெண் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசியைக் கண்டறிய பொலிஸாரும் கடற்படையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.