மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் எவ்வித கோரிக்கையும் விடுக்கவில்லை என பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
மேலும், இதுபோன்ற செய்திகள் அனைத்தும் தவறானவை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சதித்திட்டங்கள் மூலம் பிரதமர் பதவியை பெறுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராக இல்லை என நாமல் ராஜபக்ஷவும் தெரிவித்துள்ளார்.
மாறாக மக்களின் ஆதரவோடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரத்தை கைப்பற்றுவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்காக பதவியை விட்டுக்கொடுத்த அவர் மக்கள் மீண்டும் அதிகாரத்தை வழங்கினால் மட்டுமே இந்த நாட்டின் தலைமை பதவிக்கு வருவார் என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.