2022ஆம் ஆண்டு, இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிரான மதத் துன்புறுத்தல்கள் குறித்து, மதங்கள் தொடர்பான தமது வருடாந்த சுயாதீன அறிக்கையில் அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடனான சந்திப்புகளின்போது, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வலியுறுத்தியதாக அமெரிக்காவின் வருடாந்த அறிக்கை;யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன மத அடிப்படையில், சிறுபான்மையினரை மதித்து, நல்லிணக்க செயற்பாட்டின் ஒரு அங்கமாக மதச் சுதந்திரத்தை உள்ளடக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
அதேநேரம், நீண்டகாலமாக தடுப்புக்காவலில் உள்ளவர்களுக்கு குறிப்பாக காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய நடைமுறையை உறுதி செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக இலங்கைக்கு வருகைதந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்து இதனை தெரிவித்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.