ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணி சார்பாக அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை பெயரிட கட்சியின் செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க ஆகியோர் சமர்ப்பித்த பிரேரணைக்கு செயற்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்துவருவதாக அறிவித்துள்ளார்.