ஐஎஸ்ஐஎஸ் மூலம் இந்தியாவுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவதாக தேசிய அகாலி தளத்தின் தலைவர் பரம்ஜித் சிங் பம்மா குற்றம் சாட்டியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், ட்ரோன்கள் மூலம் இந்தியாவுக்கு அந்நாடு போதைப்பொருளை அனுப்புவதாகவும் சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பாகிஸ்தான் இந்தியாவுடன் நட்புறவாக இருப்பதாகக்காட்டிக்கொள்கிறது, ஆனால் மூத்த காலிஸ்தானி தீவிரவாதிகளுக்கு அவர்களின் மண்ணில் பாதுகாப்பு அளிக்கிறது.
குறிப்பாக பிலாவல் பூட்டோ ஜர்தாரியின் சமீபத்திய இந்திய வருகைக்குப் பிறகு, இந்த விவகாரங்களில் பாகிஸ்தான் சமீப காலங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
வாத்வா சிங், ரஞ்சித் சிங் நீதா, லக்வீர் சிங் ரோட் போன்ற மூத்த காலிஸ்தானி போராளிகளின் முக்கியத்துவத்தை பாகிஸ்தான் இப்போது உணர்ந்துள்ளது.
ஹர்விந்தர் சிங் ரிண்டா போன்ற பிற இளைஞர்களின் ஈடுபாட்டுடன், பாகிஸ்தான் பாதுகாப்பு நிறுவனம் ஆளில்லா விமானங்களின் உதவியுடன் இந்தியாவுக்கு போதைப்பொருட்களை அனுப்புகிறது என்றார்.