ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அலுவலகப் பொறுப்பாளர்களுக்கு இரண்டு புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதன் உப பொருளாளராக கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா நியமிக்கப்பட்டுள்ளதுடன் கட்சியின் துணைச் செயலாளர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (16) நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.