இந்தியப் பெருங்கடலில் கடந்த வாரம் கவிழ்ந்த சீனக் கப்பலில் இருந்து மொத்தம் 14 சடலங்களை கண்டுபிடித்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கையின் தெற்கே உள்ள கடற்பரப்பில் கடந்த 16ஆம் திகதி பதிவாகியிருந்த இந்த விபத்தை அடுத்து மீட்பு நடவடிக்கைகளுக்கு இலங்கை கடற்படையினரும் உதவிபுரிந்து வருகிறனனர்.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பணிப்புரையின் பேரில் கண்காணிப்பு கப்பலான எஸ்.எல்.என்.எஸ்.விஜயபாகு பணிகளில் ஈடுபட்டுள்ளது.
இந்தநிலையில், இலங்கை கடற்படையின் நீர்மூழ்கிக் குழுவினர், முன்னதாக 2 சடலங்களை கண்டெடுத்த நிலையில் தற்போது 12 பணியாளர்களின் சடலங்களை கடற்படையினர் கண்டெடுத்துள்ளனர்.
இதேவேளை விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், 17 சீன பிரஜைகள், 17 இந்தோனேசியர்கள் மற்றும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 5 பேர் என 38 பேர் கப்பலில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தில் சிக்கிய எவரும் உயிர் பிழைக்க வைக்கக்கூடிய சாத்தியம் குறைவாகவே உள்ளதாக சீனா அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.