மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தனது சட்டத்தரணிகள் ஊடாக உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார்.
தம்மை கைது செய்வதை தடுக்கும் வகையில் குற்றப் புலனாய்வு திணைக்களம் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், அதன் பணிப்பாளர் மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையத் தளபதி ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அத்துடன் எதிர் மனுதாரர்கள் தன்னை சட்டவிரோதமாக கைது செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறும், கைது செய்வதை தடுக்கும வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரி மனு இந்த தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.