உக்ரைன் தலைநகர் கீயூவ் மீது ரஷ்யா இரண்டு அலை வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கீயூவ்வின் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நகரத்தை நோக்கி வந்த குறைந்தது 40 ட்ரோன்களை வீழ்த்தியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் இந்த தாக்குதலை அடுத்து இடிபாடுகளில் சிக்கி 41 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளதாகவும் 35 வயது பெண் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ரஷ்யாவின் அணு ஆயுதங்கள் குவிப்பு குறித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் விமர்சனத்திற்காக ரஷ்யா கடும் பதிலடி கொடுத்துள்ளது.
பல ஆண்டுகளாக, ரஷ்யாவின் எல்லைக்குட்பட்ட நாடுகள் உட்பட ஐரோப்பா முழுவதும் அணு ஆயுதங்களை அமெரிக்கா குவித்துள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
பெலாரசில் அணுஆயுதங்களை நிலைநிறுத்தும் ரஷ்யாவின் முடிவை அமெரிக்கா கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.