யாழ்ப்பாணம் பருத்தித்துறை 3ஆம் குறுக்கு தெருவில் உள்ள வீடொன்றுக்கு அருகில் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை இரண்டாம் குறுக்கு தெருவை சேர்ந்த தியாகராசா சந்திரதாஸ் (வயது 33) என்பவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.