இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் 3 ரயில்கள் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 தாண்டியுள்ளது.
இந்த விபத்தில் சுமார் 900 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெங்களூரில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு 7 மணியளவில் தடம் புரண்டது.அப்போது, ரயிலின் பல பெட்டிகள் அருகில் உள்ள ரயில் பாதையில் சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலுடன் மோதியது.
பின்னர் கொல்கத்தாவில் இருந்து வந்த மற்றொரு எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் தடம் புரண்ட ரயில் மீது மோதியது. இந்த விபத்தில் சுமார் 17 ரயில் பெட்டிகள் பலத்த சேதமடைந்துள்ளன.
இந்த பயங்கர விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க, விசேட மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து விதமான நிவாரணங்களும் வழங்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சமீபத்திய வரலாற்றில் இதுவே மிக மோசமான ரயில் விபத்து என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.