மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நேற்றிரவு பெய்த கடும் மழை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் நில்வள கங்கை சில இடங்களில் பெருக்கெடுத்துள்ளது.
அத்துடன், அக்குரஸ்ஸ – சியம்பலாண்டுவ பிரதான வீதியின் பாணதுகம பகுதி நீரில் மூழ்கியுள்ளது. அதனால் குறித்த வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
எனவே பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.