ஜூன் மாதத்திற்கான முதல் நாடாளுமன்ற அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்கவுள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் இரண்டு விதிமுறைகள், வணிகக் கப்பல் சட்டத்தின் கீழ் 13 விதிமுறைகள் மற்றும் கப்பல் முகவர்களின் உரிமத்தின் கீழான விதிமுறைகள் குறித்து விவாதிக்கப்படும்.
மேலும் சரக்கு அனுப்புவோர், கப்பல் அல்லாத பொது கேரியர்கள் மற்றும் கொள்கலன் இயக்குபவர்கள் சட்டம் இன்று 10.30 முதல் மாலை 5 மணி வரை விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (06) முதல் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடும் போது மற்றும் 07 ஆம் திகதி சபை ஒத்திவைக்கப்படும் போது சிறு மற்றும் நடுத்தர கைத்தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பிலான விவாதமும் நடைபெறவுள்ளது.