தனியார் கல்வி நிலையங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் அ. சிவபாலசுந்தரனின் தலைமையில் நாளை (09) காலை 09 மணி தொடக்கம் 1 மணிவரை குழுக்கலந்துரையாடல் ஒன்றினை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பாடசாலைக்கல்விக்கு மேலதிகமாக வாரத்தில் ஏழு நாட்களும் ஓய்வின்றிக் கல்விச் செயற்பாட்டில் ஈடுபடுவதனால் மாணவர்களுக்கும் சமுதாயத்திற்கும் ஏற்படும் சாதக மற்றும் பாதக விளைவுகள் காணப்படுகின்றன.
எனவே அவை தொடர்பாக எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்களும் குறித்து மேற்படி கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் சுகாதாரம், கல்வித்துறை சார்ந்தோர், மதத் தலைவர்கள், பொலிஸார், தனியார் கல்வி நிலைய நிறுவனங்கள், பெற்றோhர், மாணவர்கள் போன்றோர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.