முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு உடையார்கட்டு மூங்கிலாறு வடக்கில் உடையார் கட்டு விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தின் இயற்கை உரத்தொழில்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
உடையார் கட்டு விவசாயிகள் கூட்டுறவு சங்க தலைவர் யோகராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கமலேஸ்வரன் கலந்து கொண்டிருந்தார்.
மேலும், சிறப்பு விருந்தினர்களாக வடமகாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமான தேவந்தினி பாபு மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் ஜெயகாந்தனும் கலந்து கொண்டிருந்தனர்.
இயற்கை உரத் தொழில்சாலையின் பெயர்ப் பலகையினை கலந்து கொண்டிருந்த அதிதிகள் திரைநீக்கம் செய்து, தொழிற்சாலையைத் திறந்து வைத்தனர்.
இதன்போது இயற்கை உரம் எவ்வாறு தயாரித்தல் என்பது தொடர்பாக அதிதிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டதுடன் பொதிசெய்யப்பட்ட இயற்கை உரம் சம்பிரதாயபூர்வமாக அறிமுகம் செய்து விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இதன்போது கலந்து கொண்டிருந்த அதிதிகளால் மரக்கன்றுகளும் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.