இஸ்தான்புல்லில் உள்ள அட்டாடர்க் மைதானத்தில் இன்டர் மிலானை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மான்செஸ்டர் சிட்டி அணி முதன்முறையாக சம்பியன்ஸ் லீக்கை கைப்பற்றியுள்ளது.
மூன்றுமுறை சம்பியன்ஸ் லீக்கை வென்ற இன்டர் மிலானுக்கு எதிரான போட்டியில் ஸ்பானிய ரோட்ரியின் 68-வது நிமிட கோல், மான்செஸ்டர் சிட்டி அணியின் வெற்றியை உறுதி செய்தது.
ஐரோப்பிய கால்பந்தின் மிகப்பெரிய கிளப் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி வெற்றி பெறுவது இதுவே முதல் முறை என்றாலும், பெப் கார்டியோலா பயிற்சியாளராக கிண்ணத்தை வெல்வது இது மூன்றாவது முறையாகும்.
15 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக, உரிமையாளர் ஷேக் மன்சூர் பின் சயீத் அல் நஹ்யான், மான்செஸ்டர் சிட்டி மகுடம் சூடும் தருணத்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.