போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகரான மைக்கேல் ட்ராவிஸை (Michael Travis ) ரஷ்யப் பொலிஸார் மொஸ்கோவில் வைத்துக் கைது செய்துள்ளனர்.
ரஷ்யாவில் அமைக்காலமாகப் போதைப்பொருள் விற்பனையானது அதிகரித்து வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் அந்நாட்டுப் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே சமயம் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் அந்நாட்டு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவில் தங்கியுள்ள பாடகர் மைக்கேல் ட்ராவிஸ், கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக ரஷ்ய பொலிஸாருக்கு ரகசியத் தகவலொன்று கிடைத்துள்ளது.
இதனையடுத்து மைக்கேல் ட்ராவிஸ்ஸிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர் உயர் ரகப் போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில்
அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.