இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 21 முதல் 24ஆம் திகதி வரை அமெரிக்காவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி குறித்த பயணத்தை முன்னெடுக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் ஜூன் 22 ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி வெள்ளை மாளிகையின் தெற்கு புல்வெளியில் இந்திய சமூகத்தைச் சேர்ந்த சுமார் ஏழாயிரம் மக்களிடம் உரையாற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சுற்றுப்பயணத்தில், பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையிலும் பிரதமர் உறையாற்றவுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் மோடி என அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.