சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளை அச்சிடும் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி சுமார் 8 இலட்சம் சாரதி உரிம அட்டைகளை அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அநுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அச்சு இயந்திரங்களின் திறன் போதிய அளவில் இல்லாததால் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் பல மாதங்களாக தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் 20 கோடி ரூபாவை செலவிட்டு புதிய இயந்திரங்களை கொள்வனவு செய்ய முடியாத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்புக்கு பொறுப்பான நிறுவனத்திடம் இருந்து ஒவ்வொரு அட்டைக்கும் 150 ரூபா வீதம் செலுத்தும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.