ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
குறிப்பாக அந்நாட்டுப் பெண்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் விதமாக, பெண்கள் ஆண்களின் துணையின்றி வெளியே செல்வதற்கும், பல்கலைக்கழகங்களில் கற்பதற்கும், விளம்பரங்களில் நடிப்பதற்கும், தொலைக்காட்சிகளில் தோன்றுவதற்கும், ஜிம் மற்றும் பூங்காவுக்குச் செல்வதற்கும் தலிப்பான்கள் தடை விதித்திருந்தமை சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்து.
இந்நிலையில் தற்போது திருமணம் மண்டபங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும், பாடல் பாடவும் தலிபான் அரசு தடைவிதித்துள்ளது.
தலிபான்களின் இந்த உத்தரவுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அதே சமயம் இசை, நடனம் போன்றவை இல்லை என்றால் திருமண வீட்டிற்கும் துக்க நிகழ்வுகளுக்கும் வித்தியாசம் இருக்காது என ஆப்கான் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.