முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஹொலிவூட் பிரபலங்கள் நடிக்கவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 800 என்ற திரைப்படம் எடுக்கப்பட்டு வருகின்றது.
முரளிதரன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மொத்தமாக 800 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதால் குறித்த திரைப்படத்திற்கு ‘800‘ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தில் ஆரம்பத்தில் முரளிதரனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருந்த நிலையில் சில அரசியல் காரணங்களினால் அவர் அப்படத்தில் இருந்து விலகினார்.
இதனைத் தொடர்ந்து ஸ்லம்டொக் மில்லியனர்’ படப்புகழ் நடிகர் மதுர் மிட்டல் முத்தையா முரளிதரனாகவும், மஹிமா நம்பியார் அவரது மனைவி மதிமலராகவும் நடிக்கின்றனர்.
இதனை கனிமொழி படத்தினை இயக்கிய ஸ்ரீபதி இயக்குகின்றார்.
அந்தவகையில் இத்திரைப்படத்தின் முதல் மோஷன் போஸ்டரானது கடந்த ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி முரளிதரனின் பிறந்த நாளன்று வெளியானது.
இந்நிலையில் இத்திரைப்படத்தில் ஹொலிட் பிரபலங்கள் நடிக்கவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இயக்குனரான எம்.எஸ்.ஸ்ரீபதி கருத்துத் தெரிவிக்கையில்” இத்திரைப்படத்தில் பிரபல ஹொலிவூட் நடிகர்களான பில் ஹர்ஸ்ட்( Bill Hurst ) மற்றும் பால் கோஸ்டா( Paul Costa) அவுஸ்திரேலிய நடுவர்களான டாரல் ஹேர் (Darrell Hair) மற்றும் ரோஸ் எமர்சன் ( Ross Emerson )வேடங்களில் நடிக்கவுள்ளனர்.
அத்துடன் அனைத்து நட்சத்திர நடிகர்களின் படப்பிடிப்பையும் நாங்கள் முடித்துவிட்டோம்.தற்போது இசை, ஒலி விளைவுகள் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் முடிவடையும் வரை காத்திருக்கிறோம்”. இன்னும் 2-3 மாதங்களில் படம் வெளியாக வாய்ப்புள்ளது. “இலங்கை, சென்னை, கொச்சின், இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
1996 உலகக் கோப்பை வென்ற தலைவர் அர்ஜுன ரணதுங்க, இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவ் மற்றும் பல கிரிக்கெட் வீரர்களின் பாத்திரங்களை ஆசிய நாடுகளைச் சேர்ந்த நடிகர்கள் நடித்துள்ளனர்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.