அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பாலியல் தொல்லை இருப்பதாக லிடியா தோர்ப் என்ற பெண் எம்.பி கண்ணீருடன் செனட் சபையில் ஆற்றிய உரையானது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் நாடாளுமன்றம் பெண்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல என தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து விவரிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” விடாமல் பின் தொடர்வது, தீவிரமாகப் பாலியல் உறவுகளுக்கு அழைக்கப்படுவது, உள்ளிட்ட பாலியல் துன்புறுத்தல்களுக்கு தொடர்சியாக ஆளானேன். குறிப்பாக பலம் வாய்ந்த ஆண்களால் நான் , பாலியல் ரீதியான விமர்சனங்களுக்கு ஆளானேன். மாடிப்படிகளில் நகர விடப்படாமல் பாலியல் தாக்குதலுக்குள்ளானேன்.
அலுவலக கதவுகளை திறக்கவே அஞ்சினேன். வெளியே செல்வதற்கு முன் மெதுவாக திறந்து எவருமில்லையென உறுதி செய்து கொள்வேன். கட்டிடத்தின் உள்ளே வரும் முன் பாதுகாப்பிற்காக என்னுடன் எவரையேனும் வைத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். என்னைப் போன்று மேலும் பலர் இருந்தாலும், தங்களுடைய நலனுக்காக அவர்கள் எதுவும் சொல்ல முன்வரவில்லை. இவ்வாறு தோர்ப் தெரிவித்தார்.