அரச மருந்தாளர் சங்கம் நாடளாவிய ரீதியில் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
அதற்கமைய இன்று (வெள்ளிக்கிழமை) காலை 08 மணி முதல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபையின் 23 மருந்தாளுனர்களை இடமாற்றம் செய்தமைக்கு எதிராகவே முன்னெடுக்கப்படுவதாக சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக பல வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு சிரமத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.