86 வயதான போப் பிரான்சிஸ் அண்மைக்காலமாக சுவாசத் தொற்றுநோய், குடல் நோய் உள்ளிட்ட சில உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த 7 ஆம் திகதி ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு 3 மணி நேரம் குடல் அறுவை சிகிச்சை இடம்பெற்றது. இதனையடுத்து அவர் வேகமாக குணம் அடைந்து வருகிறார் என வத்திகான் அரசு தெரிவித்திருந்ததோடு, அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைச் சந்தித்து பேசும் புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தது.
அதில் போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அறையின் அருகே உள்ள குழந்தைகளுக்கான புற்றுநோய் பிரிவை சக்கர நாற்காலியில் சென்று பார்வையிட்டு குழந்தைகளிடம் பேசுவது போன்று உள்ளது.
இந்நிலையில் வைத்தியசாலையைவிட்டு வெளியேறியதன் பின்னர் ஜூலை மாதம் முழுவதும் போப் ஓய்வில் இருக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.