ஒடிசாவிலுள்ள பூரி ஜெகநாதர் கோயிலில் 1 வயதுக்கு உட்பட்ட 3 குழந்தைகள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அங்குள்ள பாரம்பரியத்தின்படி, 10 மாத குழந்தையான பலதேப் தாஸ்மொகபத்ரா, 1 வயதுக் குழந்தையான எகான்சு தாஸ்மொகபத்ரா மற்றும் அதே வயதுடைய மற்றொரு குழந்தை என 3 குழந்தைகளும் அக்கோயிலின் அதிகாரப்பூர்வ அர்ச்சகர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் ரத யாத்திரையின்போது முக்கிய சடங்குகளை செய்யும் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் அவர்களுக்கு ஆண்டு ஊதியமாக இந்திய மதிப்பில் 1 லட்சம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுமெனவும் தெரிவிக்க்பட்டுள்ளது.
இது குறித்து பூரி ஜெகநாதர் கோயிலின் நிர்வாக குழு உறுப்பினர் ஒருவர் கூறுகையில் ”தைதாபதி சேவகரின் குடும்பத்தில் ஆண் குழந்தை பிறந்தால் ரத யாத்திரைக்கு 15 நாட்களுக்கு முன்னர் அவர்களை இறை சேவையில் இணைப்பது பாரம்பரியமாகப் பின்பற்றப்பட்டு வருகின்றது.
எவ்வாறு இருப்பினும் 18 வயதுக்குப் பின்னரே கோயிலில் அவர்கள் சேவை செய்ய முடியும். அதுவரை அவர்கள் ரத யாத்திரை சேவையில் மட்டுமே ஈடுபடுத்தப்படுவார்கள் ” என்றார்.