கிரீஸில் சுமார் 750 புகலிடக்கோரிக்கையாளர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளானதில் 298 பாகிஸ்தானியர்கள் உயிரிழந்துள்ள நிலையில், பாகிஸ்தானில் இன்றைய தினம் துக்க தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது
இப்படகில் 310 பாகிஸ்தானியர்கள் பயணித்துள்ள நிலையில், அவர்களில் 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் எனவும், 298 பேர் பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், உயிரிழந்தவர்களில் 134 பேர் காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இன்றைய தினத்தை துக்க தினமான அந்நாடு பிரகடனப்படுத்தியுள்ளது.
கடந்த புதன் கிழமை அதிக எடைகாரணமாக ஏற்பட்ட இவ்விபத்தில் 78 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதோடு 500 பேர் காணமற்போயுள்ளனர் எனவும் அவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையிலேயே பாகிஸ்தான் அரசு 298 பேர் உயிரிழந்துள்ளனர் என அறிவித்துள்ளது.