பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நியமிக்கப்படவுள்ளார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் சரோஜா சிறிசேனவுக்குப் பதிலாக ரோஹித போகொல்லாகம நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியா மற்றும் பிரான்சிற்கான விஜயத்தை முடித்துக்கொண்டு ஜனாதிபதி நாடு திரும்பியதும் அடுத்த வாரம் நியமனம் இறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2007 முதல் 2010 ஆம் ஆண்டுவரை வெளிவிவகார அமைச்சராகவும், 2017 ஜூலை முதல் 2018 டிசம்பர் வரை கிழக்கு மாகாண ஆளுநராகவும் ரோஹித போகொல்லாகம பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.