இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளுக்காக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்துள்ளார்.
பதவி விலகும் உயர்ஸ்தானிகரின் பிரியாவிடை நிகழ்வு அலரிமாளிகையில் இடம்பெற்ற போதே பிரதமர் தினேஷ் குணவர்தன அவரின் முயற்சிகளைப் பாராட்டியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் தனது பணியை மேற்கொண்ட சாரா ஹல்டன், பல்வேறு துறைகளில் ஈடுபாட்டுடன் செயற்பட்டார் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பிரித்தானியாவின் ஜி.எஸ்.பி. திட்டத்தின் கீழ் “வளரும் நாடுகளின் வர்த்தகத் திட்டத்தின்” கீழ் இலங்கையை ஒரு பயனாளி நாடாக இணைப்பதற்கான தீர்மானத்தையும் பிரதமர் வரவேற்றுள்ளார்.
அத்தோடு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் முடிவு மற்றும் ஐ.எம்.எப். நிதி உதவியைத் தொடர்ந்து புதிய முதலீட்டு திட்டங்கள் பிரித்தானியாவில் தொடங்கப்படும் என நம்புவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்தும் பணிகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்குப் பிரதமரின் ஆதரவு தனக்குப் பெரும் பலமாக இருந்ததாக சாரா ஹல்டன் கூறியுள்ளார்.