பாலியல் உறவுக்கான வயதை 13இல் இருந்து 16 ஆக அதிகரித்து ஜப்பான் நாடாளுமன்றம் அண்மையில் சட்டம் இயற்றியுள்ளது.
சிறுவர்கள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்கும் விதமாகவே இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது இச்சட்டத்தின் மூலம் சிறுவர்களுக்கு எதிராகப் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் கடந்த 1907 ஆண்டு முதல் 13 வயது அதற்கு மேற்பட்டோர் பாலியல் உறவில் ஈடுபடலாம் என்ற சட்டம் நடைமுறையில் இருந்து வந்தது.
எனினும் ஜப்பானில் கடந்த சில வருடங்களாக சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வந்த நிலையில் குறித்த வயதெல்லையை அதிகரிக்க வேண்டுமென மனித உரிமை அமைப்புகள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.